Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - "இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதல்" - பிரான்ஸ் அதிபர் கண்டனம்.!

ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதல் - பிரான்ஸ் அதிபர் கண்டனம்.!

JananiBy : Janani

  |  17 Oct 2020 11:30 AM GMT

பிரான்சில், 'பேச்சுரிமை' குறித்து பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மாணவர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததற்காக, அந்த ஆசிரியர் வெள்ளிக்கிழமை (நேற்று) தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்டவர், பிரான்சில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களைக் கற்பிக்கும் 47 வயது ஆசிரியர் ஆவார். 12 முதல் 14 வயதில் இருக்கும் மாணவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் குறித்துப் பாடம் எடுக்கையில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தைக் காண்பித்தார். இது பல பெற்றோர்களிடம் இருந்து புகார்களையும் பெற்றது. ஒரு குடும்பத்தினர் சட்ட ரீதியாகப் புகாரளித்தனர்.

18 வயதுடைய அவன் தாக்குதல் நடந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளான். இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரான்சில் பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும் இது ஒரு 'படுகொலை' என்றும் கண்டித்தார். "எங்கள் ஆசிரியர் அவரது மாணவர்க்குக் கருத்துச் சுதந்திரம் பற்றிக் கற்றுக்கொடுத்ததால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது ஒரு கோழைத்தனமான இஸ்லாமியத் தீவிரவாத தாக்குதலுக்கு இவர் பலியாகியுள்ளார்" என்று மக்ரோன் கூறியுள்ளார்.

இந்த தாக்குதலானது உள்நாட்டுப் பிரிவினைவாதத்தைத் தடுப்பதற்காக ஒரு புதிய சட்டத்தை மக்ரோன் கொண்டுவரும் நேரத்தில் நடந்துள்ளது. மேலும் மேற்கு ஐரோப்பாவில் இஸ்லாமியச் சமூகம் அதிகம் வசிப்பது பிரான்சில் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ட்விட்டரில் #parisbeheading என்று ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Next Story