Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒபாமா ஆதரவு பிரச்சாரம்.!

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஒபாமா ஆதரவு பிரச்சாரம்.!

Vignesh KBy : Vignesh K

  |  17 Oct 2020 12:33 PM GMT

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆதரவு பிரச்சாரம் செய்வதற்கு முடிவெடுத்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இரு கட்சியின் தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் இருக்கும் இந்தியா மக்களின் வாக்குகளை பெறுவதற்கு இரண்டு கட்சியினரும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு நடந்த கருத்துக் கணிப்புகளில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்பை விட ஜோ பிடனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வருகின்ற திங்கட்கிழமை அன்று அவருடைய முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். தற்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கும் ஆதரவாக முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பிரச்சாரத்தை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒபாமா, பென்சில்வேனியாவில் நடக்க உள்ள பிரச்சாரத்தில் இவருடைய பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிற வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தை செய்வது முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story