Top
undefined
Begin typing your search above and press return to search.

சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் - உதவிய அரசு பயிற்சி மையங்கள்.!

சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் - உதவிய அரசு பயிற்சி மையங்கள்.!

VinithaBy : Vinitha

  |  18 Oct 2020 5:42 AM GMT

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வுக்கு தயாரான அரசு பள்ளி மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 738 பேரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் 877 பேரும் மொத்தம் ஆயிரத்து 1615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு எழுதிய 6692 அரசுப்பள்ளி மாணவர்களில் 738 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 3 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர். மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது கூடுதல் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும்போது கூடுதல் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வில் கடந்த ஆண்டு தமிழகத்தில் 48.57 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி அடைந்தவர்களின் விகிதம் 57.44 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8.88 சதவீதம் அதிகமாகும். அரசு இலவச நீட் தேர்வு மையங்களில் படித்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால் இவை மாணவர்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது என்று பெற்றோர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Next Story