Top
undefined
Begin typing your search above and press return to search.

இயற்கையை ரசிப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.!

இயற்கையை ரசிப்பதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.!

BharathiBy : Bharathi

  |  18 Oct 2020 8:39 AM GMT

மன இறுக்கம் பிரச்சனைக்காக மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் அதற்கு பதிலாக மருந்துகளை எழுதிக் கொடுத்து அனுப்புவார்கள். ஆனால் ஸ்காட்லாந்து மற்றும் கனடாவில் மன அழுத்தத்திற்கு புதுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அது என்ன தெரியுமா? அங்கு இருக்கும் மருத்துவர்களால் மன அழுத்தை நீக்குவதற்கு ஒரு புதிய முறை கையாளப்பட்டு வருகிறது.அது என்னவென்று பார்க்கிறீர்களா? அது வேறொன்றுமில்லை. மன அழுத்தம் என்று பிரச்சினையோடு வருபவர்கள் "இயற்கையை ரசியுங்கள்"என்ற சிறப்பு மருந்தை அந் நாட்டு மருத்துவர்கள் பரிந்துரைக்க தற்போது ஆரம்பித்துள்ளனர்.



ஆம்! உண்மையில் இயற்கையை ரசிப்பது மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மன அழுத்தம் என்பது நம் ஒரு வேளையில் முழுவதுமாக என் நேரம் ஈடுபடும் பொழுது நமது மனம் என்ற ஒன்றிற்கு ஓய்வு கிடைக்காமல் முழுநேரமும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதனால் தான் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. 24 மணி நேரமும் வேலை, வேலை, வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பதால் மன அழுத்தம் நம்மை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றது.



நீங்கள் இயற்கையை ரசிப்பவர்களாக இருந்தால் உங்களிடம் மன அழுத்தம் என்ற ஒன்று எட்டிப்பார்க்காது. தற்போது இந்தத் தொற்று காலத்தில் நாம் வெளியே போவது சற்று கடினமாக இருந்தாலும், கிடைக்கும் நேரங்களில் அதாவது ஓய்வு நேரங்களில் இயற்கையை சிறிதுமாக ரசியுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் கோயில்களுக்கு சென்று உங்களுடைய மனதை ஒரு நிலைப்படுத்தி அதற்கு ஓய்வு கொடுங்கள

Next Story