Top
undefined
Begin typing your search above and press return to search.

கிருஷ்ணகிரியில் திடீரென்று தரையிறங்கிய ஹெலிகாப்டர்.!

கிருஷ்ணகிரியில் திடீரென்று தரையிறங்கிய ஹெலிகாப்டர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 9:12 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதனால் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், பர்கூர் அருகே உள்ள கந்திலி மலைப்பகுதியில் திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனையடுத்து அந்தப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பகுதிக்கு செல்ல துவங்கினர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது வானம் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக பைலட்கள் விளக்கம் அளித்தனர்.

Next Story