Top
undefined
Begin typing your search above and press return to search.

கல்வி அறிவை வளர்க்க உதவும் ஆப்ஸ்.!

கல்வி அறிவை வளர்க்க உதவும் ஆப்ஸ்.!

BharathiBy : Bharathi

  |  18 Oct 2020 11:15 AM GMT

கல்வி சம்பந்தப்பட்ட அறிவை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் தங்களுக்கு தேவையான விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் ஒரு புதிய ஆப் அறிமுகம் ஆகி உள்ளது. கே-சேது(K-Setu) செய்து என்ற பெயரில் முழுக்க முழுக்க தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களை மையப்படுத்தி இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிண்டர்கார்டன் கல்வி தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் இதில் மாணவர்கள் பகிர்ந்து கொள்ளலாம். பல விஷயங்களில் மற்றவர்கள் பார்த்து அவர்களுக்கு தேவையான தகவலை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதை 'வீ எக்ஸ்போ இந்தியா' என்ற கல்வி அமைப்பு உருவாக்கி உள்ளது.




இந்த அப்ளிகேஷனில் மூலம் மாணவர்கள் மற்றும் அனுபவமிக்க கல்வியாளர்கள் வீடியோ கான்பரசிங் மூலம் சந்திக்க முடியும். அவர்களும் பயிற்சியாளர்களும் கருத்துக்களை பரிமாற உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 500க்கும் மேற்பட்ட கல்வி களுடன் பிரபல கல்வியாளர் களுடன் ஒன்றிணைந்து இந்த அப்ளிகேஷன் முயற்சியை முன்னெடுத்துள்ளனர். அனுபவமிக்க ஆசிரியர்கள் கல்வியாளர்கள் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என பலர் கல்வி சம்பந்தப்பட்ட தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.


கே- சேது அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெய்சன் ராஜ்குமார் கீழ்கண்டவாறு கூறுகையில், "கடினமான கணக்குப் புதிர்கள், புரியாத அறிவியல் கோட்பாடுகள், புதிரான பாடத்திட்டங்கள் எல்லாம் இனி அனுபவிக்க கல்வியாளர்கள் தங்களுடைய பதிவின் மூலம் விளக்கியுள்ளனர். இது மட்டுமின்றி சுலபமான விஷயங்களுக்கும் இதில் பகிரப்படும்" என்று கூறினார். மேலும் தமிழக மாணவர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.


Next Story