Top
undefined
Begin typing your search above and press return to search.

மதிப்பெண்களுடன் சேர்ந்து திறன்களை எப்படி வளர்ப்பது?

மதிப்பெண்களுடன் சேர்ந்து திறன்களை எப்படி வளர்ப்பது?

BharathiBy : Bharathi

  |  18 Oct 2020 8:37 AM GMT

பள்ளி மற்றும் கல்லூரிகள் படிப்புகளின் போதும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று இருக்காமல் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு முக்கியம் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பே இல்லை. அதை வெளியில் பள்ளி, கல்லூரி காலங்களில் திறன்களை வளர்த்துக் கொண்டால்தான் சாதாரண மாணவர்கள் சாதனை மாணவர்களாக மாற முடியும் என்பதை நாம் எங்கு எப்போதும் கற்றுக் கொள்ளப் போகிறோம்?



இன்றைய மாணவர்கள் எதிர்கால கனவென்று, கடின உழைப்பு, நேர்மையான வாழ்வு, கடவுள் நம்பிக்கை போன்றவைகள் தான் ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தும் என்று வெற்றியாளர்களின் உறுதியான நம்பிக்கையை ஏற்க தயங்கி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டம், தேர்வு மதிப்பெண் ஆகியவற்றின் மட்டும் கவனம் செலுத்தும் இவர்களின் நிலை மாற வேண்டும். பள்ளிக் காலங்களிலேயே ஆங்கில மொழித்திறன், ஆளுமை பண்பு, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், குழு கலந்துரையாடல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.



மாணவர்களுக்கு 'உன்னால் முடியும், நீ நல்லா வருவ, நீ பெருசா சாதிக்க போற, தைரியமா இரு' என்பன போன்ற நம்பிக்கை உணர்வு ஊட்டும் மனோ தத்துவ ரீதியான பயிற்சி அளிப்பது அவசியம். மாணவர்களிடமிருந்து இவை போன்ற வார்த்தைகளை வாழ்க்கைக்குரிய வளங்களை ஊட்டி வளர்க்கும் பள்ளிகளில் இயற்றினால் தான், படிக்கும் மாணவர்கள் வெடித்து சிதறி விழுந்து பல சாதனைகளைச் செய்வார்கள்.

எல்லா மாணவர்களையும் கடலளவு சக்தி இருந்து கொண்டு இருக்கிறது. அதை வெளிக்கொணரும் வேலை செய்யும் ஆசிரியர்கள், கல்வி முறையை இன்றைய உடனடி தேவையாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்களுடைய திறன்களையும் திறமைகளை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்புகள் அவரைத் தேடி நிச்சயம் வரும் என்பது எதார்த்த உண்மை தான்.

Next Story