Kathir News
Begin typing your search above and press return to search.

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: மத்திய அரசு உத்தரவு!

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: மத்திய அரசு உத்தரவு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 April 2021 11:36 AM GMT

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பணியிடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் சுமார் 100 தகுதி வாய்ந்த பயனாளிகளைக் கொண்ட அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் மட்டுமே தடுப்பூசி போட அரசாங்கம் அனுமதித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மக்களுக்கு (45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட) தடுப்பூசிகளின் அணுகலை அதிகரிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அமர்வுகள் பணியிடங்களில் (பொது மற்றும் தனியார்) சுமார் 100 தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுள்ள பயனாளிகளைக் கொண்ட இடங்களில் அமைக்கலாம்.


இந்த அமர்வுகளை ஏற்கனவே உள்ள கொரோனா தடுப்பூசி மையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படலாம். இதுபோன்ற பணியிட தடுப்பூசி மையங்கள் 2021 ஏப்ரல் 11 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுவதும் தொடங்கப்படலாம்" என மத்திய அரசு தனது அறிக்கையை தெரிவித்துள்ளது.


ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதாக மார்ச் 23 அன்று அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 16 ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போடப்பட்டு, முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 2 முதல் தொடங்கியது. பிப்ரவரி 24 ஆம் தேதி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட தீவிர உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடுவதை மார்ச் 1 முதல் அரசாங்கம் அறிவித்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News