Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா கட்டணம் ரூ.11 கோடி கொரியர் பில்லை பார்த்து அதிர்ச்சியான நோயாளி - இது நம்ம நாட்டில் இல்லிங்க, அமெரிக்காவில்.!

கொரோனா கட்டணம் ரூ.11 கோடி கொரியர் பில்லை பார்த்து அதிர்ச்சியான நோயாளி - இது நம்ம நாட்டில் இல்லிங்க, அமெரிக்காவில்.!

V.ThangavelBy : V.Thangavel

  |  2 Jun 2020 5:07 AM GMT

உலகம் முழுவதும் பேசும்பொருள் கொரோனா என்ற வார்த்தைதான், எங்கு பார்த்தாலும் மரணம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அது போன்று அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகானத்த்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர் ராபர்ட் டென்னிஸ் இவர் ஒரு ஆசிரியர், இவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சில வாரங்களுக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து கொரியர் வந்துள்ளது.

அதனை பிரித்து பார்த்தபோது மருத்துவ கட்டணமாக 1.5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11.33 கோடி) செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் மருத்துவமனைக்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அதாவது உங்கள் மனைவிக்கும் சேர்த்து கட்டணம் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். நல்ல வேளையாக அவர் மருத்துவ காப்பீடு செய்திருந்துள்ளார்.

இதனால் கட்டணம் செலுத்துவதில் இருந்து அவர் தப்பித்து இருக்கிறார். இருப்பினும், அந்த மருத்துவமனை கட்டணத்தை பார்க்கும் போது உண்மையில் ஒருவகை அச்சமாகவே இருக்கிறது. இவ்வளவு கட்டணமாக என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

Next Story