Top
undefined
Begin typing your search above and press return to search.

கேரள தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம். முதல்வர் பிரனாயி முதன்மை செயலர் பதவி உடனடியாக பறிப்பு #Kerala

கேரள தூதரகம் பெயரில் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம்.  முதல்வர் பிரனாயி முதன்மை செயலர் பதவி உடனடியாக பறிப்பு #Kerala

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 8:15 AM GMT

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்றுள்ளார்.

ஆனால் இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக தகவல் கசிந்தது.

இதனை தொடர்ந்து , சமீபமாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் யு.ஏ. ஈ நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக மீர் மொகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

அமீரகத்திலிருந்து ஒரு முறை தங்கம் கடத்துவதற்கு ஸ்வப்னா ரூ. 25 லட்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது.

Next Story