Top
undefined
Begin typing your search above and press return to search.

பாலைவன வெட்டிகிளிகளின் அட்டுழியம் : பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூபாய் 3,800 கோடி கடன் வழங்கும் - உலக வங்கி.!

பாலைவன வெட்டிகிளிகளின் அட்டுழியம் : பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூபாய் 3,800 கோடி கடன் வழங்கும் - உலக வங்கி.!

Vignesh KBy : Vignesh K

  |  22 May 2020 11:29 AM GMT

பாலைவன வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பயிர்களை அழித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகளுக்கு சுமார் ரூபாய் 3800 கோடி ( 500 மில்லியன் டாலர்) நிதியை குறைந்த வட்டி உடன் கடன் மற்றும் மானியமாகவும் வழங்கப்படும் என உலக வங்கி கூறப்படுகிறது.

சென்ற 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த முறை 23 நாடுகளில் வெட்டுக்கிளிகள் பல பயிர்களை அழித்து நாசமாகியுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பட்டினியில் வாழ்ந்துவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கு கடும் உணவு பற்றாக்குறை நிலை உண்டாகி உள்ளது.


மேலும் இந்த ஆண்டின் கடைசியில் சுமார் ரூபாய் 65 ஆயிரம் கோடி அளவிலான பயிர் இழப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முதல் கட்டமாக எத்தியோப்பியா, கென்யா,உகாண்டா போன்ற நாடுகளுக்கு ரூபாய் 1200கோடி வழங்க உள்ளதாக உலக வங்கி கூறியுள்ளது.

Source: https://www.polimernews.com/dnews/110121

Next Story