Top
undefined
Begin typing your search above and press return to search.

சீனாவில் இனி காட்டு விலங்குகளை வேட்டையாடவும், சாப்பிடவும் 5 ஆண்டுகால தடை - திறக்கப்பட்ட மாமிச சந்தைகள் மீண்டும் மூடப்பட்டன.!

சீனாவில் இனி காட்டு விலங்குகளை வேட்டையாடவும், சாப்பிடவும் 5 ஆண்டுகால தடை - திறக்கப்பட்ட மாமிச சந்தைகள் மீண்டும் மூடப்பட்டன.!

R SubbaiahBy : R Subbaiah

  |  22 May 2020 10:35 AM GMT

கொரோனா வைரஸ் தோன்றிய சீன நகரமான வுஹானில் அதிகாரிகள், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கும், உட்கொள்வதற்கும் தடை விதித்துள்ளது. தகவல்களின்படி, புதிய கட்டுப்பாடு வுஹான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்ற புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தடைசெய்யப்பட்ட விலங்குகள்

அனைத்து நிலப்பரப்பு வனவிலங்குகள், தேசிய மற்றும் ஹூபே மாகாண பாதுகாப்பு பட்டியல்களில் உள்ள விலங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளை குடியிருப்பாளர்கள் உட்கொள்ளவோ அல்லது வேட்டையாடவோ முடியாது என்று விதிமுறை கூறியுள்ளது.

காட்டு சூழலில் இயற்கையாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளையும், செயற்கையாக இனப்பெருக்கம் செய்து வளர்க்கும் காட்டு விலங்குகளையும் இனிமேல் நுகரவோ வேட்டையாடவோ முடியாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த நீர்வாழ் விலங்குகள் மற்றும் தற்போது தேசிய பாதுகாப்பு பட்டியலில் உள்ள நீர்வாழ் விலங்குகள் மற்றும் ஆபத்தான நீர்வாழ் விலங்குகள் உள்ளிட்ட சில நீர்வாழ் விலங்குகளும் தடை செய்யப்பட்ட இந்த விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வுஹான் மக்கள் இப்போது இவற்றை வேட்டையாடவோ, சாப்பிடவோ தடை செய்யப்பட்டுள்ளனர்.

5 ஆண்டுகள் தடை

புதிய கொள்கை சென்ற மே 13 அன்று வெளியிடப்பட்டது. வன விலங்குகளின் நுகர்வு மற்றும் வேட்டையாடுதலுக்கான தற்போதைய தடை உத்தரவு மேற்கண்ட 5 ஆண்டுகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று முதலில் வுஹானின் பச்சை மாமிச சந்தைகளில் இருந்து தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்தையில் வைரஸ் ஒரு காட்டு விலங்கிலிருந்து மனித உடலுக்குள் புகுந்திருக்கலாம் என்று நிபுணர்கள் அப்போது கூறியிருந்தனர்.

சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 55 வயதான ஒரு பெண், அத்தகைய சந்தை மூலம் COVID-19 ஐ தொற்றிய முதல் நபராக இருக்கலாம். சீனாவின் வுஹானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தை கொரோனா வைரஸின் மையமாக நம்பப்படுகிறது. நோயின் ஆரம்ப பரவல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனவரி மாதத்தில் அந்த சந்தை மூடப்பட்டிருந்தாலும், மார்ச் இறுதியில் சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது புதிய உத்தரவுப்படி மீண்டும் மூடப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் பலவிதமான கட்டு விலங்குகள், பிதிய வகையான நீர் விலங்குகளை கண்மூடித்தனமாக உண்ணும் பழக்கம் தெற்கு சீனாவில் பரவியதாக கூறப்படுகிறது. இதற்கென கூடும் இந்த பச்சை மாமிச சந்தைகளில் வினோத விலங்குகளின் இறைச்சிகள் மட்டும் ஆண்டுக்கு 18 பில்லியன் டாலர் மதிப்பில் விற்பனையாதகாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் கொரோனா போன்ற வைரஸ்கள் மனித இனத்துக்கு பழக்கமில்லாத வினோத இறைச்சி வகைகளை சாப்பிடுவதன் மூலம் தோன்றும் என்று கணித்துள்ளனர். 2007 ஆம் ஆண்டில் செங் வி.சி, லா எஸ்.கே., வூ பி.சி மற்றும் யுவன் கே.ஒய் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை, ஒன்றில் "குதிரை இலாட வெளவால்களில் SARS-CoV போன்ற வைரஸ்கள் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story