Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா வைரஸ் தோல் மீது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும்.!

கொரோனா வைரஸ் தோல் மீது 9 மணி நேரம் உயிருடன் இருக்கும்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 10:45 AM GMT

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கொரோனா தொற்றை ஒழிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் முயற்சி செய்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களின் தோல் மீது 9 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும் என்று ஜப்பான் ஆய்வு தகவல் ஒன்று பரபரப்பாக கூறியுள்ளது. சானிடைசர்களில் இருக்கும் எத்தனாலை பூசும்போது 15 வினாடிகளில் அவை அழிந்து விடுந்து விடுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கைகளின் தோல்களில் உயிருடன் இருக்கும் கொரோனா வைரசால் தொற்று பரபல் அபாயம் இருப்பதாகவும், கைகளை சுத்தமாக வைத்திருப்பதால் இந்த அபாயத்தை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story