Top
undefined
Begin typing your search above and press return to search.

பீகார் மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 94.31 சதவீதமாக உயர்வு.!

பீகார் மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 94.31 சதவீதமாக உயர்வு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 10:32 AM GMT

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவாகிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

பீகாரில் அதிக அளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டபோதிலும், தினசரி நோய்த்தொற்று குறைவாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 1173 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 2,03,060 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. 1,91,515 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்மூலம் குணமடைதல் விகிதம் 94.31 சதவீதமாக உயர்ந்துள்ளது. 10,554 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 990 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பீகாரில் இதுவரை 90.15 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story