Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, தைவானை தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராகும் பிரிட்டன்? #Taiwan #China #Britain

ஹாங்காங் விஷயத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க, தைவானை தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராகும் பிரிட்டன்? #Taiwan #China #Britain

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Jun 2020 4:43 PM GMT

'புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்' நடைமுறைக்கு வருவதன் மூலம் சீனா இறுதியாக ஹாங்காங்கை, கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான அதிகாரத்தின் கீழ் கொண்டுவருகிறது. சீனாவின் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டு சீன-பிரிட்டிஷ் கூட்டுப் பிரகடனத்தை மீறுவதாகும், இதன் படி 2047 வரை ஹாங்காங்கின் முதலாளித்துவ அமைப்பையும் வாழ்க்கை முறையையும் சீனா மாற்றக் கூடாது. ஆகவே, முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங்கில், ஜனநாயகத்திற்காக போராடியவர்களை சீனா நசுக்க முயற்சிப்பதால், தைவானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதற்கான செயல்முறையைத் தொடங்குவதன் மூலம் பிரிட்டன், சீனாவுக்கு பதிலடி தர முயற்சிக்கிறது.

தைவானில் வாழவும் வேலை செய்யவும் ஹாங்காங் நாட்டினருக்கு விசா சலுகையுடன், ஹாங்காங் போராட்டங்களுக்கு முழு மனதுடன் ஆதரவு அளித்துள்ள தைவானுக்கு பிரிட்டன் தனது ஆதரவை வழங்கக்கூடும். "ஹாங்காங் குடிமக்களுக்காக தைவானில் தங்களின் குடியிருப்பு, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைக்கான தெளிவான, முழுமையான திட்டங்களை வகுக்கும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்று தைவான் ஜனாதிபதி ட்வீட் செய்துள்ளார்.பிரிட்டிஷ் செய்தித்தாள், தி சண்டே எக்ஸ்பிரஸ் தரும் தகவலின் படி, அடுத்த சில ஆண்டுகளில் சீனாவை மீறி, தைவானுக்கு அதன் ஆதரவை வழங்குவதற்கு பிரிட்டன் ஆலோசித்து வருகிறது. "இன்னும் சில வருடங்களில் நாங்கள் தைவானை அங்கீகரித்து, அதை இராணுவ ரீதியாக பாதுகாப்பதில் மற்றவர்களுடன் இணைந்தால் ஆச்சரியப்பட வேண்டாம்" என்று வட்டாரங்கள் தெரிவிக்கன்றன.

இதுவரை, மற்ற அனைத்து மேற்கத்திய நாடுகளையும் போலவே, பிரிட்டனும் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை சீனாவின் உண்மையான பிரதிநிதியாக அங்கீகரித்துள்ளது, ஆனால் தைவானுடன் நல்லுறவு வர்த்தக உறவைப் பேணி வருகிறது. சீனா-தைவான் பிரச்சினையை சமாளிக்க இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு இது ஒரு செயல்முறையாகும். 18 நாடுகள் மட்டுமே தைவானை ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கின்றன.

ஆனால், ஹாங்காங்கின் ஆட்சியைப் பிடுங்குவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றுமாறு சீனாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, பிரிட்டன் தைவானுக்கு ஆதரவு கொடுக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு இப்பகுதி முழு சுயாட்சியை அனுபவிக்கும் என்ற நிபந்தனையின் பேரில் 1997 ஆம் ஆண்டில் பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது, இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட 'ஒரு நாடு, இரண்டு அமைப்பு' உடன்படிக்கையை சீனா கடைப்பிடிக்கவில்லை என்று பிரிட்டிஷ் அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

உலகளாவிய போலீஸ் ஒத்துழைப்பு மற்றும் குற்றக் கட்டுப்பாட்டை எளிதாக்கும் சர்வதேச அமைப்பான 'இன்டர்போல்' என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்பில் தைவானின் பங்களிப்பை பிரிட்டன் ஆதரித்தது. இந்த அமைப்பில் சேர விருப்பத்தை தைவான் வெளிப்படுத்தியுள்ளதுடன், "சட்ட அமலாக்கத்திலும் ஒழுங்கை நிலைநிறுத்துவதிலும் உலகளாவிய முயற்சிகளுக்கு உதவுவதற்காக தைவானின் அறிவையும் அனுபவத்தையும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமும் திறமையும் உள்ளது" என்று கூறுகிறது. ஆனால் சீன அழுத்தம் காரணமாக இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் ஹாங்காங்கின் சுயாட்சியைப் பாதுகாக்க சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்க கடும் அழுத்தத்தில் உள்ளது. ஏழு முன்னாள் இங்கிலாந்து வெளியுறவு செயலாளர்கள் - ஜெர்மி ஹன்ட், டேவிட் மிலிபாண்ட், ஜாக் ஸ்ட்ரா, வில்லியம் ஹேக், மால்கம் ரிஃப்கைண்ட், டேவிட் ஓவன், மற்றும் மார்கரெட் பெக்கெட்- ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெற சீனா மீது அழுத்தம் கொடுக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போதைய வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஏற்கனவே, "நாங்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்கப் போவதில்லை. ஹாங்காங் மக்கள் மீது இருக்கும் எங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.

"இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா பின்பற்றினால், பி.என்.ஓ பாஸ்போர்ட்களை (பிரிட்டிஷ் நேஷனல் ஓவர்சீஸ் பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்களுக்கு இங்கிலாந்துக்கு வருவதற்கான உரிமையை நாங்கள் வழங்குவோம்," என்று அவர் பிபிசியிடம் ஒரு பேட்டியில் கூறினார்.

சீனா மற்றும் அதன் நிறுவனங்களை பின்னணியில் தள்ளுவதற்காக ,அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்தின் 5 ஜி நெட்வொர்க்கில் ஹவாய் ஈடுபாட்டை முற்றிலுமாக அகற்றுவதற்கான திட்டத்தை கோருவது போன்ற பல முடிவுகளை கடந்த சில வாரங்களில் பிரிட்டன் எடுத்துள்ளது,

பிரிட்டனும் ஹாங்காங்கில் கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஹாங்காங் குடிமக்களுக்கு விசா உரிமைகளை வழங்குவதாக உறுதியளித்தது; ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஹாங்காங்கின் பிரச்சினையை எழுப்புதல், மற்றும் ஹவாய் நிறுவனத்திற்கு எதிரான 10 ஜனநாயக நாடுகளின் கூட்டணியான டி 10 ஐத் திட்டமிடுதல் போன்ற வேலைகளையும் பிரிட்டன் தொடர்ந்து செய்து வருகிறது.

இங்கிலாந்தை சீனாவின் மிக வலிமையான எதிரியாக மாற்றுவதில் டொனால்ட் டிரம்ப் முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் ஈராக் படையெடுப்பிற்கு முன்னர் "நான் உங்களுடன் இருப்பேன்" என்று கூறியது போல, ஜான்சன் சீனாவுக்கு எதிரான பனிப்போர் விஷயத்தில் டிரம்பிற்கும் இதை சூசகமாக உணர்த்தியுள்ளார்.

தைவானை ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்க மேற்கத்திய நாடுகளிடையே பிரிட்டன் முன்னிலை வகித்தால் அது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல.

Author: Amit Agrahari (The Frustrated Indian)

Next Story