என்னாது ரூ 1 கோடி மதிப்புள்ள பீர் கேஸ் ரோட்டுல இருக்கா?
என்னாது ரூ 1 கோடி மதிப்புள்ள பீர் கேஸ் ரோட்டுல இருக்கா?

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மேலும் மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்படடு அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து பிற மாநில வாகனங்கள் உள்ளே அனுமதிப்பதில்லை. இதனிடையே கோவாவில் இருந்து புதுச்சேரிக்கு 11லாரிகளில் ரூபாய்.1 கோடி மதிப்பிலான பீர் பாட்டில்களை கொண்டு வந்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக கடந்த 20 தினங்களாக ஆங்காங்கே நிறுத்தி ஒரு வழியாக புதுச்சேரி எல்லைக்கு லாரிகளை கொண்டு வந்துள்ளனர் ஆனால் அத்தியாவசிய பொருட்களை தவிர்த்து வெளி மாநில வாகனங்களை புதுச்சேரிக்குள் அனுமதிக்க முடியாது என போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் இதனால் பீர் கேஸ்களுடன் லாரிகள் மாநில எல்லையில் நின்றுகொண்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக புதுச்சேரி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்பட்ட ஓட்டுனர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர் இதனையடுத்து 2 நாட்களுக்கு லாரிகளை சரக்குடன் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மாநில எல்லையில் பாதுகாப்பிற்காக போடப்படுள்ள போலீசாருக்கு அருகே பீர் கேஸ்களுடன் உள்ள லாரிகளை ஓட்டுனர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.