புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 சதவீதம் வரி உயர்வு நாளை முதல் அமல்..
புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 சதவீதம் வரி உயர்வு நாளை முதல் அமல்..

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 சதவீதம் வரி உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவிப்பு இதன் மூலம் பெட்ரோல் டீசல் விலை 50 பைசா வரை விலை உயருகின்றது.
புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல கட்டங்களில் எடுத்து வருகின்றது. இதுவரை மாநிலத்தில் இந்த நோயால் 5 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள், பொதுமக்களுக்கு முக கவசம், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசிடம் ரூபாய் 995 கோடி நிதி வேண்டும் என கேட்டு இருந்தார்.
மேலும் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மது விற்பனை, சுற்றுலா, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மூலம் கிடைத்து வந்த வருவாய் தடைபட்டதால் கடும் நிதி நெருக்கடியில் புதுச்சேரி அரசு சிக்கித்தவிக்கின்றது. அதனால் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி ஒரு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த வரி நாளை முதல் (10.04.20) அமலுக்கு வருகிறது இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 பைசா வரை உயர வாய்ப்புள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பில் இருந்து வசூலாகும் நிதியை கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்காக சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் என நிதித்துறை செயலர் சுர்பிர் சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.