பத்திரிகையாளர்களுக்கு ரூ 10 லட்சம் காப்பீடு வழங்க ஹரியானா முதலமைச்சர் அறிவிப்பு.!
பத்திரிகையாளர்களுக்கு ரூ 10 லட்சம் காப்பீடு வழங்க ஹரியானா முதலமைச்சர் அறிவிப்பு.!

கொரோனா வைரஸ் பணியில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களுக்கு ரூபாய். 10 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பணியில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்கள் சில பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் 70 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் தமிழ்நாட்டில் 27 பேர், மும்பையில் 53 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் பத்திரிகையாளர்களுக்கும், நிபுணர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் பணியில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு வழங்கும் வகையில் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.