Kathir News
Begin typing your search above and press return to search.

நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு அளிக்க மறுக்கும் தமிழக அரசை எதிர்த்து கோவில் அர்ச்சகர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு அளிக்க மறுக்கும் தமிழக அரசை எதிர்த்து கோவில் அர்ச்சகர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 Jun 2020 8:17 AM GMT

தமிழக அரசு சென்ற ஜூன் 4 – ந்தேதி பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வருவாய் மற்றும் சொத்து சான்று வழங்குவதை நிறுத்துமாறு உததரவிட்டது. இதனால் சென்ற ஆண்டு மத்தியஅரசு கொண்டு வந்த நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சத ஒதுக்கீட்டின்படி கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகை பெற விண்ணப்பிக்கும் தமிழக பொதுப்பிரிவு மாணவர்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக கல்வி நிறுவனங்களில் மற்றும் அரசு, பொதுத்துறைகளில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (ஈ.டபிள்யூ.எஸ்) படி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்மகோபாலன் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன், தனது மனுவில்: மத்திய அரசு சட்டம் இயற்றி அறிவித்த பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு சலுகைகள் பல மாநிலங்களிலும் நன்மைகளை அளித்து வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் இந்த சலுகைகளை மறுப்பதாக கூறியுள்ளார்.

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு திருத்தம் பற்றி தான் அறிந்த பின்னர் நீதிமன்றத்தில் இந்த மனு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கோபாலனின் மனுவை நீதிபதிகள் ஆர் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த விவகாரத்தில் ஒரு மனுவில் தமிழகம் ஒரு வாதி என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார். மாநில அரசின் கருத்து சமர்ப்பிப்பு பதிவு செய்யப்பட்ட பின்னர், வழக்கு ஜூலை 17 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே அதிக அளவில் 69 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படும் மாநிலமான தமிழகத்தில் முன்னேறிய பிரிவினராக கருதப்படும் பிராமணர்களில் உள்ள வறுமையில் வாடும் கோவில் அர்ச்சகர்களின் குழந்தைகளும் முன்னேறிய பிரிவினராக கருதப்படுவதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், தற்போதைய தமிழக அரசின் முடிவால் தங்களின் குழந்தைகளின் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதாகவும் அர்ச்சகர் கூறியுள்ளார். என டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இந்த சமூக அநீதியை கண்டிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற கட்சிகள் இந்த பிரச்சினையை கண்டு கொள்ளாமல் சமூக நீதி என்ற பெயரில் நீட் தேர்வில் பிற்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை அணுகி போலி அரசியல் செய்து வருவதாக நடு நிலை ஆங்கிலப் பத்திரிகைகள் குறை கூறியுள்ளன.

Next Story