Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயி அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் உதவி; வனத்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்தால்தான் நிதியை ஏற்போம் - முத்துவின் மகள் வசந்தி திட்டவட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 July 2020 1:16 PM GMT

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையத்தில் வனத்துறையினர் விசாரணை நடக்கும் போது பலியான அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவியும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்துவின் நிலம் முழுவதும் மின்வேலி போட்டதை கண்டறிந்த வனத்துறையினர் முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு விசாரணையின் நடக்கும் சமயத்தில் முத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தென்காசி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே முத்து உயிரிழந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த வனத்துறை அலுவலர்க மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் தான் அரசு கொடுக்கும் நிதி உதவியை ஏற்போம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே முத்துவின் மகள் வசந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அதில் என்னுடைய அப்பாவின் மரணத்திற்கு காரணமான வனத்துறை அலுவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் தான் அரசு கொடுக்கும் நிதி உதவியை ஏற்றுக்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News