Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது.!

புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது.!

புதுச்சேரி : முதலமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 July 2020 3:10 PM GMT

புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 1311வவுச்சர் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் வவுச்சர் ஊழியர்களுக்கு மாதத்தில் 16நாட்கள் வேலையும் நாள் ஒன்றுக்கு ரூ.200ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே வவுச்சர் ஊழியர்களை முழுநேர தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும், மாதம் முழுவதுமாக வேலை அளிக்க வேண்டும், நிலுவையில் உள்ள் ஊதியத்தை வழங்க வேண்டும், மத்திய அரசின் குறைந்தபட்ச சட்டக்கூலி நாள் ஒன்றுக்கு ரூ.600ஆக் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றக்கோரி வவுச்சர் ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தி வந்தனர்.


மேலும் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை நிறைவேற்றாத நிலையில் இன்று உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.20கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்த வைக்க முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வந்தனர் அப்போது திடீரென அங்கு வந்த 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர் மேலும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகியோர் காரில் வெளியே வந்த போது ஊழியர்கள் காரின் முன்பு படுத்து முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story