கொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்!
கொரோனாவால் இத்தாலியில் மாண்டுப்போன நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - தவிக்கும் ஐரோப்பிய பிரதேசம்!

கொரோனாவால் இத்தாலியில் 100 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை இத்தாலி நாட்டின் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை 16 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 90 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் 1லட்சத்து 43 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 28,470 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. இதற்கு முன்பே 30மருத்துவர்கள், செவிலியர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்பற்றி இத்தாலிய மருத்துவ சங்கம் கூறிய அறிக்கையில்: இத்தாலியில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரத் துறையில் வேலை பார்க்கின்றனர். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டது தான் இதற்கு காரணம். இவ்வாறு மருத்துவ சங்கம் தெரிவித்தது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2518535