சிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்தனர்! ஆட்சியும் போச்சு, கட்சியும் அம்பேல்!
சிந்தியாவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் பா.ஜ.க-வில் இணைந்தனர்! ஆட்சியும் போச்சு, கட்சியும் அம்பேல்!

மத்திய பிரதேச மாநில அரசியலில் மிகவும் செல்வாக்கான குடும்பம் ஜோதிராதித்யா சிந்தியாவின் குடும்பம். வரலாற்று சிறப்பு பெற்ற குவாலியர் அரண்மனையில் இருந்து ஆட்சி செய்த மன்னர் வம்ச குடும்பமாகும். பிரிட்டிஷாரை எதிர்த்து வரலாற்றில் பேசப்படும் 'மராத்தா போர்கள்' புரிந்தவர்கள். இவரின் பாட்டியான இராஜமாதா என அழைக்கப்படும் விஜய ராஜே சிந்தியா பா.ஜ.க-வை தோற்றுவித்த மூத்த தலைவர் ஆவார். அவர் பா.ஜ.க. சார்பில் 5 முறை குவாலியர் தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவருடைய தந்தை மாதவராவ் சிந்தியா மாநில காங்கிரஸ் தலைவராகவும் பல முறை எம்.பி. யாகவும், நரசிம்மராவ் ஆட்சியின் போது விமான போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2002-ஆம் ஆண்டு விமான விபத்தில் உயிர் இழந்தார். அதன் பிறகு, ஜோதிராதித்யா சிந்தியா மாநில காங்கிரஸ் பிரமுகரானாலும், மேற்கொண்டு அவரால் காங்கிரசில் வளர முடியவில்லை.
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின் ஜெகன் மோகன் ரெட்டியை சோனியா காந்தி வளர விடாமல் செய்தார். இதற்கு காரணம் தங்கள் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் நாட்டில் வாரிசு அடிப்படையில் வளரக் கூடாது என அவர் நினைத்தார் என கூறப்பட்டது. இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி இழுத்து மூடக்கூடிய அளவு வந்துவிட்டது.
அதே போல மத்திய பிரதேசத்திலும் மாதவராவ் சிந்தியாவின் மரணத்துக்கு பிறகு அவரது மகனாகிய ஜோதிராதித்ய சிந்தியாவையும் வளர்க்க சோனியாவுக்கும், ராகுலுக்கும் மனம் இல்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகிய பின்னர் அவரது ஆதரவளர்களான 22 எம்.எல்.ஏ க்களும் வெளியேறி பா.ஜ.க- வில் இணைந்துள்ளனர். இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஜோதிராதித்யா சிந்தியாவை தொடர்ந்து குணா, சாகர், அசோக் நகர், குவாலியர், இந்தூர், சிவ்புரி மற்றும் வேறு சில மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் உட்பட சுமார் 10,000 காங்கிரஸ் நிர்வாகிகள் விலகி பா.ஜ.க. வில் நேற்று ஒரே நாளில் இணைந்துள்ளதாகவும், மேலும் பல ஆயிரம் காங்கிரசார் வெளியேறி பா.ஜ.க. வில் இணைவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும், தீவிர சிந்தியா ஆதரவாளருமான சதுர்வேதி தெரிவித்தார்.