Kathir News
Begin typing your search above and press return to search.

மதகுருவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 10,000 பேர்! தப்லிகி ஜமாத் வெர்ஷன் II

மதகுருவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 10,000 பேர்! தப்லிகி ஜமாத் வெர்ஷன் II

மதகுருவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 10,000 பேர்! தப்லிகி ஜமாத் வெர்ஷன் II

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 July 2020 12:11 PM GMT

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் ஊரடங்கு விதிகளை மீறி ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமிய மத குருவின் இறுதிச் சடங்கில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய ஜாமியத் உலமா அமைப்பின் துணைத் தலைவர் கைருல் இஸ்லாம், வயது 87, என்பவர் சில நாட்களுக்கு முன் நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஜூன் 2 அன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.‌ மத குரு என்பதால் அவரை பலருக்கும் நன்றாகத் தெரியும் என்று கூறப்படுகிறது. எனவே அவரது இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் (AIUDF) எம்எல்ஏவாக இருக்கும் கைருல் இஸ்லாமின் மகன் அமினுல் இஸ்லாம் இறுதிச் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து 10,000 பேராவது கூடி இருப்பார்கள் என்று கணித்துள்ள மாவட்ட நிர்வாகம் இறுதிச் சடங்கு நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள மூன்று கிராமங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறை தானாக முன்வந்து ஒரு வழக்கும் அந்த இடத்தில் இருந்த மாஜிஸ்திரேட் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கும்‌ பதியப்பட்டுள்ளன. இந்த தகவலை அளித்த நாகோன் மாவட்ட துணை கமிஷனர் ஜாதவ் சைக்கியா, கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும்‌ ஏற்படவில்லை என்றும் எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க அமலில் இருக்கும் சமூக விலகல், பொது இடங்களில் கூட்டம் கூடாமல் இருப்பது போன்ற விதிகளை மீறியதால் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இறுதி ஊர்வலம் பற்றி முன்னரே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிகளவில்‌ அப்பகுதிக்கு வாகனங்களில் வந்தவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பிய போதும் எப்படியோ நிறைய பேர் வந்து கூட்டம் சேர்நதுவிட்டது என்று எம்எல்ஏ அமினுல் அஸ்லாம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மத மோதலைத் தூண்டும் வண்ணம் பேசிய ஆடியோவை சமூக ஊடகங்களில் வெளிட்டதாக தேச துரோக வழக்கு பதியப்பட்டு அமினுல்‌ அஸ்லாம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்தவர்களை தனிமைப்படுத்தி வேண்டுமென்றே இஸ்லாமியர்களைக் குறி வைப்பதாகவும், தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்களைக் கொன்று விட்டு‌ கொரோனாவால் தான் இறந்தார்கள் என்று அரசு கூறிவிடும் என்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் இந்த ஆடியோவில் அமினுல் அஸ்லாம் பேசி இருந்தார். தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊர்‌ திரும்பி வைரஸைப் பரப்பியவர்களால் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் ஓயாத நிலையில் மற்றொரு இஸ்லாமிய கூட்டமா என்று மக்கள் பதறிப் போய் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News