போலி டாக்டர் பட்டம், குதூகலித்த குஷ்பூ - இதெல்லாம் ஒரு பிழைப்பாமா?
போலி டாக்டர் பட்டம், குதூகலித்த குஷ்பூ - இதெல்லாம் ஒரு பிழைப்பாமா?

சர்ச்சைக்குரிய திரைப்பட நடிகை குஷ்பு தனது அரசியல் வாழ்க்கையிலும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே இருந்து வருகிறார். முதலில் தி.மு.க-வில் சேர்ந்த நடிகை குஷ்பு அங்கு ஏதும் பெரிதாக சோபிக்க முடியாததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். எடுத்த எடுப்பிலேயே தேசிய செய்தித்தொடர்பாளர் பதவி குஷ்பூவிற்கு வழங்கப்பட்டது. அதற்கு பிறகு ஒன்றும் பெரிதாக காங்கிரஸ் கட்சியிலும் அரசியல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எம்.பி, எம்.எல்.ஏ சீட்டுகள் ஏதும் வழங்கப்படவில்லை. காரணம், இவர் காங்கிரஸ் கட்சியில், முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் சேர்ந்துக்கொண்டு அணி சேர்த்து கோஷ்டி அரசியலில் ஈடுப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன குஷ்பு நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் முனைவர் பட்டம் பெற்றுள்ளதாக ட்வீட் போட்டுள்ளார்.
Very happy to share with you that I have been conferred with #Doctorate by the #InternationalTamilUniversityUSA #Humbled #Grateful #Gratitude 🙏🙏🙏🙏 pic.twitter.com/Opfd2q4hew
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 5, 2020
உலகத் தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா தனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளாதாக குஷ்பு அறிவித்துள்ளார். பொதுவாக முனைவர் பட்டம் ஒன்று படித்து பெற வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சமூதாயத்தில் சாதித்தவர்களின் சேவையை பாராட்டி வழங்கப்பட வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் கெளரவ முனைவர் பட்டங்களை வழங்கலாம். இப்பட்டங்களை முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பெற்றுள்ளனர்.
குஷ்பு வாங்கியுள்ள முனைவர் பட்டத்தை வழங்கியுள்ள உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் இல்லை என தங்களது வலைதளத்திலேயே தெள்ளத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source - http://tamiluniversityusa.org
ஆக, எந்த அரசாலும் அங்கீகரிக்கப்படாத ஒரு செயல்படாத பல்கலைக்கழகத்தில் இருந்து பணம் கொடுத்து பெறப்பட்ட போலி முனைவர் பட்டத்திற்கு இத்தனை தம்பட்டம் தேவை இல்லை திருமதி.குஷ்பு சுந்தர் அவர்களே, படித்து முனைவர் பட்டம் பெற முடியுமா அல்லது சமூதாயத்திற்கு உண்மை தொண்டாற்றி அதன் மூலம் கெளரவ முனைவர் பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் பெற முடியுமா என பார்க்கவும், போலிகள் பிரயோஜனம் இல்லை.