நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் பின்னார் பார்க்கலாம் - இல.கணேசன்
நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும் பின்னார் பார்க்கலாம் - இல.கணேசன்

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. வின் மூத்த தலைவர் இல.கணேசன், பா.ஜ.க. வில் அமைப்புக்கு என ஒரு பிரிவும், ஆட்சிக்கு என்ற ஒரு பிரிவும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் பா.ஜ.க. வில் இரு பிரிவு உள்ளது போல் நடிகர் ரஜினிக்கும் அதே திட்டம் இருக்கலாம் என்பதை அவர் வெளிப்படுத்தி உள்ளார். இதுபோன்ற ஒரு திட்டம் ரஜினிக்கு இருந்தால் அது நல்லது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அமைப்பு ரீதியாக செயல்படுபவர்கள் சமுதாயத்தில் பிரபலமாக மாட்டார்கள். ஆட்சிக்கு வருபவர்கள் தான் பிரபலம் ஆவார்கள். ஆனால் பிரபலமானவர் ரஜினி. நல்ல எண்ணத்தில் சொல்லியிருக்கிறார். அவர் கட்சி ஆரம்பித்த பின்பு பார்ப்போம் என்றார்.
மேலும் பேசிய அவர்,
பா.ஜ.க. தலைவர்களோடு ரஜினிக்கு நல்ல நட்பு உள்ளது. ஆனால் இப்போது அவர் ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கும், பா.ஜ.க. விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரே கூறி விட்டார்.
பா.ஜ.க. புதிய தலைவர் முருகன் திறமையானவர், அவரால் பா.ஜ.க. மீண்டும் வளர்ச்சிபெறும். பா.ஜ.க. தலைவர் ரேசில் நான் இல்லை. அதனால் பா.ஜ.க. தலைவர் தேர்வில் நான் திருப்தியாக இருக்கிறேன் என்றார்.