நமது கலாச்சாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது கொரோனா வைரஸ் - தெலங்கானா ஆளுநர் Dr.தமிழிசை!!
நமது கலாச்சாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது கொரோனா வைரஸ் - தெலங்கானா ஆளுநர் Dr.தமிழிசை!!

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் - "நமது கலாச்சாரத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது கொரோனா வைரஸ்" என தெரிவித்தார்.
Addressed College Day Celebrations at Ethiraj College for Women , Chennai on 14-03-2020 pic.twitter.com/jeia8OoCLh
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 14, 2020
"வணக்கம் தான் சொல்ல வேண்டும்" என கொரோனா வைரஸ் தற்போது பாடம் சொல்லிக்கொடுத்து இருப்பதாகவும், "நமது கலா
ச்சாரத்தைப் பேணிக் காக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார். கொரோனா வைரஸ் பற்றி யாரும் அச்சம் அடைய தேவையில்லை, ஆனால் யாரும் அஜாக்கிரதையாக இருந்துவிடக் கூடாது, மேலும் கொரோனா வைரஸ் 80% ட்ராப்லெட்ஸ் மூலம் பரவுவதால் அடிக்கடி நாம் கைகளை கழுவ வேண்டும்" என தெரிவித்தார்.
Inaugurated Indoor Sports Training centre at Ethiraj College for Women, Chennai on 14.03.2020 pic.twitter.com/lnAdPkVEhE
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 14, 2020