கொரோனா எதிரொலி - முகத்தில் மாஸ்க் அணிந்தபடி காவல்நிலையத்தை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
கொரோனா எதிரொலி - முகத்தில் மாஸ்க் அணிந்தபடி காவல்நிலையத்தை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார், மேலும் அவ்வப்போது அரசு அலுவலகங்களுக்கு திடீரென ஆய்வு செய்தும் வந்தார். இதனிடையே பொதுமக்கள் காவல் நிலையத்தில் அளிக்கும் புகார்களை சரியான முறையில் விசாரிப்பது இல்லை என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புகார் சென்றது.
இதனிடையே துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நகரப் பகுதியில் உள்ள பெரியகடை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு வந்த அவர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகத்தில் மாஸ்க் அணிந்தபடி காவல் நிலையத்திற்கு வந்தார் இந்த
ஆய்வின்போது எஸ்எஸ்பி ராகுல்அல்வால், எஸ்பி மாறன், இன்ஸ்பெக்டர் செந்தில், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்து குமரன் , முருகன் உள்ளிட்ட போலீஸார் இருந்தனர் ஆய்வின்போது காவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்,
காவலர்களே தவறு செய்திருந்தால் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.
சட்டப்படி காவல்துறை புகார்களின் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.