பீதி அடைய வேண்டாம் : கொரோனா வைரஸிலிருந்து எளிதில் தப்பிக்கலாம் - பிரிட்டிஷ் அரசு
பீதி அடைய வேண்டாம் : கொரோனா வைரஸிலிருந்து எளிதில் தப்பிக்கலாம் - பிரிட்டிஷ் அரசு

உலகம் முழுவதும் பரவும் தொற்று வைரசான கொரோனாவால் கடந்த ஜனவரி முதல் இது வரை ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்னும் 96 ஆயிரத்திற்கும் மேலான நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். என்றாலும் 79 ஆயிரத்து 433 பேர் நேற்று வரை குணமடைந்துள்ளனர். எனவே பீதி அடைய வேண்டாம் என இங்கிலாந்து நுண்ணுயிர் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்:
கொரோனா வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்க வாய்ப்புண்டு. பெரும்பாலான மக்களுக்கு ஆரம்பத்தில் சிறிதளவே இந்த தாக்கம் இருக்கும். கடந்த ஜனவரி மாதத்தில் 220 பேர் முழுமையாக குணம் பெற்றனர். பிப்ரவரியில் 39 ஆயிரத்து 782 பேரும். மார்ச்8 ம் தேதி வரை 60 ஆயிரத்து 695 பேர் குணம் அடைந்தனர். நேற்றைய வரை 79 ஆயிரத்து 433 பேர் குணம் பெற்றுள்ளனர்.
இதனால் கொரோனா ஒரு உயிர்க்கொல்லி அல்ல என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் யாரும் பீதி அடைய தேவையில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.