தமிழகத்தை புறக்கணிக்கிறதா சன் குழுமம்.? அண்டை மாநிலங்களில் லம்பாக 108 கோடியை இறக்கிய மாஸ்டர் பிளான்!
தமிழகத்தை புறக்கணிக்கிறதா சன் குழுமம்.? அண்டை மாநிலங்களில் லம்பாக 108 கோடியை இறக்கிய மாஸ்டர் பிளான்!

சன் குழுமம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி பேசும் மக்களுக்காக தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தை புறக்கணித்து அண்டை மாநிலங்களுக்கு உதவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரபிரதேசம், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் கழிப்பிடங்கள் கட்டும் திட்டத்திற்காக சன் டி.வி. 3 கோடியே 39 ஆயிரத்து 429 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இந்த நிதி உதவியின் மூலம் கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் தலா 10 பொதுக் கழிப்பிடங்களும் கேரள மாநிலத்தில் 4 பொதுக்கழிப்பிடங்களும் புனரமைக்கப்படுவதுடன் ஆந்திராவில் 7 பள்ளிகளில் கழிப்பிடங்கள் கட்டப்படும்.
ஏழை எளியோர் நலன், சுகாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. மற்றும் சன் பவுண்டேஷன் இணைந்து இதுவரை ரூ.108 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது.
இதன் பின்னணியிலும் வியாபார நோக்கம் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தமிழகத்தை பொறுத்த வரை சினிமா, சீரியல் போதையில் மக்கள் ஊறி போய்விட்டனர். தனியாக விளம்பரபடுத்தி சேனலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் மாற்ற மாநிலங்களில், சேனலை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் தேவைப்படும் என்பதால், இந்த வழியில் களமிறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.