விசு மறைவு - ரஜினி மற்றும் பிரபலங்கள் இரங்கல்.. சோகத்தில் திரைத்துறையினர்..
விசு மறைவு - ரஜினி மற்றும் பிரபலங்கள் இரங்கல்.. சோகத்தில் திரைத்துறையினர்..

இயக்குனர் விசு மறைவையொட்டி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் ரஜினி விசுவின் மறைவு குறித்து தனது டிவிட்டர் பதிவில் "என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குநர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியிருக்கிறார்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டர் பதிவில், "இந்த ஆளுமை நம்மை விட்டுச் சென்று விட்டார். அற்புதமான எழுத்தாளர், அட்டகாசமான இயக்குநர், தனித்துவமான நடிகர், தன்னுடைய சென்டிமெண்ட் மற்றும் நகைச்சுவை வசனங்கள் மூலமாக குடும்பங்களைத் தொட்டவர். இன்றும் இவருடைய படங்கள் பேசும். விசு சாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்"
இந்த ஆளுமையின் 'அரட்டை அரங்கம்', 'தில்லு முல்லு', 'சம்சாரம் அது மின்சாரம்', 'சிதம்பர ரகசியம்', 'பெண்மணி அவள் கண்மணி', 'திருமதி ஒரு வெகுமதி', 'வரவு நல்ல உறவு', 'மணல் கயிறு' உள்ளிட்ட பல முக்கிய படங்கள் என்றென்றும் வாழும். உங்களை மறக்க முடியாது சார்" என தனது இரங்களை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் "'சம்சாரம் அது மின்சாரம்', 'மணல் கயிறு', 'சிதம்பர ரகசியம்' என நிறையப் படங்கள். என்னுடைய இளமைக் காலத்தில் முக்கிய அங்கமாக இருந்திருக்கிறீர்கள். ஞாயிறுகளில் உங்கள் பட்டிமன்றம், புத்திசாலித்தனமான திரைக்கதை, அழகான நகைச்சுவை என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்" என டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.