10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானது, தேர்வுகள் நிச்சயம் நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.!
10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானது, தேர்வுகள் நிச்சயம் நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்.!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் 11-ம் வகுப்பில் உரிய பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுப்பதற்கும், பாலிடெக்னிக் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கும், TNPSC உள்ளிட்ட தேர்வுகள் எழுதுவதற்கும் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியமானது. ஆகவே, 10-ம் வகுப்பு தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என தெரிவித்தார்.
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அதற்குப் பின்னர் 10-ம் வகுப்பு தேர்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கல்வித்துறையின் மூலமாக தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும், மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் குறைந்த காலத்தில் எழுதுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. கோடைக்காலம் என்பது அல்ல மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மூன்று மணி நேரம் தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆகவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் அட்டவணை பத்தாம் வகுப்பு அட்டவணை முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்று இந்தத் துறையை நிறைவேற்றும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் ஊரடங்கு முடிவுற்ற பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும். மேலும் தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி யாராவது கட்டணம் வசூல் செய்வதாக கவனத்திற்கு வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.