Begin typing your search above and press return to search.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் - தருமபுரம் ஆதீனம்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 11 லட்சம் - தருமபுரம் ஆதீனம்!

By :
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரத பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பல நிலைகளில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வருகிறார்கள்.
அதிக பொருளாதாரத் தேவை என்பதை உணர்ந்து, தருமபுரம் ஆதீனம் மற்றும் அதனை சார்ந்த தேவ ஸ்தானங்கள் வாயிலாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 11 லட்ச ரூபாய் வழங்கப்படும் என கூறினார். மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து மக்கள் விடுபட்டு, நலமுடன் வாழ, தருமபுரம் ஆதீனம் சார்பாக சிறப்பு யாகங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.
Next Story