Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா : கொரானா போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்பிய 110 வயது மூதாட்டி.!

கர்நாடகா : கொரானா போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்பிய 110 வயது மூதாட்டி.!

கர்நாடகா : கொரானா போராட்டத்தில் வெற்றி பெற்று வீடு திரும்பிய 110 வயது மூதாட்டி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Aug 2020 8:54 AM GMT

கர்நாடக சிற்றதுர்கா மாவட்டத்தில் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, 110 வயது பெண்மணி ஒருவர் சனிக்கிழமை அன்று கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சித்தமா அவர்கள் காவல் குடியிருப்பில் தங்கியுள்ளதாகவும் இவருக்கு ஐந்து குழந்தைகளும், 17 பேரக்குழந்தைகளும் மற்றும் 22 கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளதாகச் சுகாதார துறையின் அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த ஜூலை 27 அன்று இவர் மற்றும் இவரது குடும்பத்தில் சிலபேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டு சிற்றதுர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது இவர் அந்நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். தைரியமிகுந்த இந்த பெண்மணி நான்கு பேர் ஆதரவுடன் மருத்துவர் மற்றும் ஊழியர்கள் வரவேற்க மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சித்தமாவிடம் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்ட பின்பு பயமடைந்தீர்களா என்று கேட்டதற்கு, " நான் எதற்கும் பயமடையவில்லை என்றும் மருத்துவமனையில் அளித்த சிகிச்சை மற்றும் உணவுகள் மகிழ்ச்சியளிக்கிறது", என்று அவர் தெரிவித்தார். வயதான பெண்மணி கொரோனா வைரஸ் இருந்து குணமடைந்து அரசு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் பெற்றிருப்பது பெருமை அளிப்பதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாவட்ட அறுவைசிகிச்சை மருத்துவர் பாசவராஜூ தெரிவித்தார்.

"எனக்குத் தெரிந்த வரை 110 வயதுள்ள முதியவர் கொரோனாவில் குணமடைந்திருப்பது ரூ சாதனையே ஆகும், அப்பெண்மணி காவல் குடியிருப்பில் தங்கியிருக்கும் ஒரு காவலரின் தாயார் ஆவார் ," என்று பாசவராஜூ கூறியுள்ளார். இதே போன்று 96 வயது பெண்மணி ஒருவர் கொரோனா நோயில் குணமடைந்திருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். சித்தமா வழக்கு மருத்துவக்குழுவினரை மேலும் உற்சாகத்துடனும் தைரியத்துடனும் செயல்பட தூண்டுகிறதென்று பாசவராஜூ தெரிவித்தார்.


source: https://www.deccanherald.com/national/south/110-year-old-woman-from-chitradurga-wins-battle-against-covid-19-868490.html

Next Story