"சாலையில் சுற்றினால் சுட்டுத் தள்ளுவோம்" - தெலங்கானா முதல்வர் அதிரடி!
"சாலையில் சுற்றினால் சுட்டுத் தள்ளுவோம்" - தெலங்கானா முதல்வர் அதிரடி!

கொரோனவா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி நேற்று இரவு இதை அறிவித்தார். இதை அடுத்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஊரடங்கை அமல்படுத்துவதில் முனைப்புடன் உள்ளன.
இந்த நிலையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார், அவர் கூறுகையில் "நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதன் தீவிரம் புரியாமல் பலர் வழக்கம்போல் சாலையில் நடமாடுவதாகவும், சிலர் வாகனங்களில் செல்வதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதை பார்த்துக் கொண்டு சும்மாக இருக்க முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் கூறியுள்ளேன். அவசியமானால் ராணுவத்தை அழைத்து கட்டுப்பாட்டை மதிக்காதவர்களை சுட்டுத்தள்ளவும் தயாராக உள்ளதாக" அதிரடியக கூறியுள்ளார்.