தூய்மை பணியாளர்களை ஸ்கேவெஞ்சர்ஸ் என கொச்சைப்படுத்திய மு.க.ஸ்டாலின் - வலுக்கும் எதிர்ப்பு!
தூய்மை பணியாளர்களை ஸ்கேவெஞ்சர்ஸ் என கொச்சைப்படுத்திய மு.க.ஸ்டாலின் - வலுக்கும் எதிர்ப்பு!

மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி "தூய்மை #பணியாளர்கள் என அழைக்கப்படுவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 19 அன்று அறிவித்தார்.
இந்நிலையில், வெளியில் வந்து மக்களுக்கு எந்த உதவியும் செய்திடாத தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வீட்டிலேயே ஏசி அறையில் அமர்ந்துக் கொண்டு தி.மு.க நிர்வாகிகளிடம் நிவாரணப்பணிகளை மேற்பாடையிடுவது போன்ற தொனியில் நமக்கு நாமே ஸ்டைலில் ஒரு நாடக வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ ம.சுப்ரமணியத்திடம் உரையாடும் போது தூய்மை பணியாளர்களை ஸ்கேவெஞ்சர்ஸ் என குறிப்பிடுகிறார். தீண்டாமையில் மூழ்கியுள்ள மு.க.ஸ்டாலின் நமது தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தியுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
Extremely shameful of DMK President @mkstalin to address our own people as "scavengers". TN Chief Minister rechristened them as recently as "தூய்மைப் பணியாளர்கள்"!
— SG Suryah (@SuryahSG) March 30, 2020
Once again this reiterates the untouchability that's being practised by #DMK & #MKStalin !pic.twitter.com/j6OPBpK7He