புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியில் கொரோனா- எல்லைக்கு சீல்!
புதுச்சேரி ஒட்டிய தமிழக பகுதியில் கொரோனா- எல்லைக்கு சீல்!

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, புதுச்சேரி எல்லைக்குள் இருக்கும் விழுப்புரம் மாவட்டம் பகுதிகளான கோட்டகுப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் புதுச்சேரி நகருக்கு தங்கள் அத்யாவசிய தேவைகளுக்காக வருவது வழக்கம்.
இந்நிலையில் கோட்டகுப்பத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, இதனால் அருகில் இருக்கும் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அந்த தமிழக பகுதி மக்கள் புதுச்சேரி நகருக்கு வராதபடி கோட்டகுப்பம்-புதுச்சேரி எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது, மேலும் சம்மந்தப்பட்ட எல்லையில் இருக்ககூடிய மார்கெட், மருந்தகம் உள்ளிட அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை அடுத்த 14 நாட்களுக்கு மூடவும் மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவிட்டார். தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி சீல் வைக்கப்பட்ட பகுதியில் செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தகவல் தெரிவித்துள்ளார்.