கடைசி நேரத்தில் பிரம்மாண்ட தப்ளிகி ஜமாத் கூட்டத்தை நிறுத்தி சுதாரித்த இந்தோனேஷியா - நடந்தது என்ன?
கடைசி நேரத்தில் பிரம்மாண்ட தப்ளிகி ஜமாத் கூட்டத்தை நிறுத்தி சுதாரித்த இந்தோனேஷியா - நடந்தது என்ன?

மலேஷியாவில் நடைபெற்ற தப்ளிகி ஜமாத் கூட்டத்தின் சீன வைரஸான கொரோனா பரவுவதன் வாயிலாக பாடம் கற்றுக் கொண்ட இந்தோனேசியா தன் நாட்டில் இறுதி நிமிடத்தில் தப்ளிகி ஜமாத் கூட்டத்தை தடை விதித்து கொரோனா பாதிப்பை குறைத்து உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மலேஷியாவில் பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடைபெற்ற தப்ளிகி ஜமாத் கூட்டத்தின் வாயிலாக கொரானா பரவியது. மலேஷிய கூட்டத்தின் தொடர்ச்சியாக மார்ச் 19-ஆம் தேதி முதல் 3 நாட்கள் ஆசிய பகுதிக்கான இஜிடிமா 2020 நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்தோனேஷியா தெற்கு சுலவெசியில் இருந்து 1.5 மணி நேர பயண தூரத்தில் உள்ள மக்காஷரில் கோவா நகரில் 9,000 பேர் கூட தனியார் உறைவிட பள்ளியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு 9 வெளிநாடுகளை சார்ந்த 411 உட்பட 8,634 திரண்ட நிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தை உணர்ந்து இறுதி நிமிடத்தில் தடை உத்தரவு பிறப்பித்தது.
முஸ்லிம் நாடான இந்தோனேசியா 26.7 கோடி மக்களுடன் உலகின் நான்காவது ஜனத்தொகை மிகுந்த நாடு. தப்ளிகி கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்ட மார்ச் 19 அன்று 227 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு 19 இறப்பு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்த மலேஷிய நபர் ஒருவர் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட அவர் நாடு திரும்ப தடை விதித்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தப்ளிகி கூட்டம் நடைபெற்று இருந்தால் நோய் தொற்று பல மடங்கு அதிகரித்து இருக்கும்.
ஒரு பக்கம் தப்ளிகி ஜமாத் கூட்டத்தை முன் எச்சரிக்கையாக தடை விதித்து இருந்தாலும் ப்ளோரஸ் தீவு பகுதியில் மங்கரை தலைநகர் ரூடெங்கில் 4,000 பேருடன் பிஷப் சிப்ரியனஸ் ஹார்மேட் பங்கேற்ற புதிய கத்தோலிக்க சர்ச் திறப்பு விழா நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.