Top
undefined
Begin typing your search above and press return to search.

12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.!

12 நாட்களுக்கு 6 லட்சம் - கொரோனா சிகிச்சையில் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனை.!

Vignesh KBy : Vignesh K

  |  9 Aug 2020 11:56 AM GMT

மதுரையில் உள்ள தனியார் மருத்துவனையில் 12 நாட்களுக்கு கொரோனா சிகிச்சை கொடுத்ததில் ஆறு லட்சம் ரூபாய் கட்டணம் வசூல் செய்துள்ளனர்.

மதுரையில் இருக்கும் லட்சுமணன் மல்டி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைக்கு தமிழக அரசு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3 ஆம் தேதி நேமிசந்த் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன்பிறகு 14ஆம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், பதிவு கட்டணம் இரண்டாயிரம் என ஆரம்பித்து, ஒரு நாளைக்கு அரை வாடகை என்ற கணக்கில் ஐந்து ஆயிரம் வீதம் 12 நாளுக்கு 60 ஆயிரம் ரூபாயும், பிபிஇ கிட் ஒன்றுக்கு இரண்டாயிரம் என 96 கிட்களுக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் உள்பட 6 லட்ச ரூபாய் அந்த மருத்துவமனை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதை பற்றி கேட்ட போது, மருத்துவர்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கின்றனர் எனவும் மருந்துகள் மூன்றாவது தரப்பில் இருந்து வாங்குவதால் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என கூறியுள்ளனர்.

Next Story