Kathir News
Begin typing your search above and press return to search.

நாள்தோறும் ஆயிரமாயிரம் ஏழைகளின் பசியாற்றும் பா.ஜ.க பிரச்சார பிரிவு செயலாளர் மகேஷ் - நெகிழ்ச்சியில் சேலம்!

நாள்தோறும் ஆயிரமாயிரம் ஏழைகளின் பசியாற்றும் பா.ஜ.க பிரச்சார பிரிவு செயலாளர் மகேஷ் - நெகிழ்ச்சியில் சேலம்!

நாள்தோறும் ஆயிரமாயிரம் ஏழைகளின் பசியாற்றும் பா.ஜ.க பிரச்சார பிரிவு செயலாளர் மகேஷ் - நெகிழ்ச்சியில் சேலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 6:20 AM GMT

கொரோனா நோய் தொற்று அச்சத்தினால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு 24 நாட்களை கடந்து சென்றுக் கொண்டு இருக்கிறது. இக்காலங்களில் பலர் சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பலர் மளிகை பொருட்களை வழங்குகின்றனர், உணவுகளை வழங்குகின்றனர். இன்னபிற உதவிகளையும் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், தனி மனிதர்கள் என அனைவரும் தங்களால் இயன்ற சேவையை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

அரசாங்கம் தனி இயந்திரமாக இம்மாதிரி நேரங்களில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவது சற்றே கடினம் தான். இருப்பினும், சிலர் தங்கள் சேவைகளை தொடர்ந்து பல தடங்கல்களையும், சிரமங்களையும் மீறி செய்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் சேலத்தை சேர்ந்த மகேஷ். தமிழக பா.ஜ.க-வின் பிரச்சாரப்பிரிவின் மாநில செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவிற்கு முன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இவர் தன் குழுவினருடன் சேலம் நகரின் பட்டி, தொட்டியெல்லாம் தன்னுடைய ஜீப்பில் சென்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டது மட்டுமின்றி லட்சக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு அந்த படிவங்களையும் பதிவிரக்கம் செய்து கொடுத்து வந்தார்.

இக்கொரோனா கட்டுப்பாடு நேரத்தில் பலர் உணவின்றி தவிப்பர் என அறிந்த இவரின் குழு, முதன்முதலாக கடந்த மார்ச் 26-ஆம் தேதி இரண்டாயிரம் பேருக்கு இவர் குழுவினர் மதிய உணவு தயாரித்து வழங்கினர். Ready for distribution pic.twitter.com/hOO6QFbmCf

முதல் நாளே பல போலீஸார், சேலம் பொது மருத்துவமனை வளாகம் என பசியால் துடித்த அனைவருக்கும் இவரது குழுவால் சாம்பார் சாதம் வழங்கப்பட்டது.Just came back home after serving prasadam ( food) to nearly 2000 people

இரண்டாம் நாள் மார்ச் 27-ஆம் தேதி இதே போல் அனைவருக்கும் தயிர் சாதம் வழங்கப்பட்டது.Today distributing Curd rice pic.twitter.com/UC4NZXEeba

தொடர்ச்சியாக மார்ச் 29-ஆம் தேதி நான்காயிரம் மக்களுக்கு பிரம்மாண்டமாக உணவு தயார் செய்யப்பட்டு சேலம் நகர் முழுவதும் வழங்கப்பட்டது.Today's cooking for 4000 people pic.twitter.com/IMT0RIuNo7

மார்ச் 31-ஆம் தேதி தொடர்ந்து அனைவருக்கும் வெஜிட்டபிள் ரைஸ் வழங்கப்பட்டுள்ளது.Our team in action distributing. Prasadam pic.twitter.com/O09h3iIIB7

ஏப்ரல் ஒன்றாம் தேதி நான்காயிரம் பேருக்கு சுவையான தயிர் சாதம் வழங்கப்பட்டுள்ளது.Our team in action distributing. Prasadam pic.twitter.com/O09h3iIIB7

நாட்கள் ஆக ஆக, மகேஷ் அவர்களின் குழு செய்யும் சமையலின் அளவும் அதிகரித்துக் கொண்டே வந்தது. ஏப்ரல் 2-ஆம் தேதி 5000 பேருக்கு சாம்பார் சாதம் சமைத்து சேலம் முழுவதும் பசியால் வாடிய மக்களுக்கு வழங்கப்பட்டது.Today Sambar rice for over 5000 people pic.twitter.com/zbeGI1hELr

ஏப்ரல் 3-ஆம் தேதி 5000 பேருக்கு எலுமிச்சை சாதம் தயாரித்து வழங்கப்பட்டது.Today's maha Prasadam for 5000 people pic.twitter.com/EvECPbqxhq

ஏப்ரல் 4-ஆம் தேதி மீண்டும் எண்ணிக்கை அதிகமாகி 6000 பேருக்கு தக்காளி சாதம் சமைத்து வழங்கப்பட்டது.Todays prasadam for 6000 people

ஏப்ரல் 5-ஆம் தேதி 6000 பேருக்கு தயிர் சாதம் சமைத்து வழங்கப்பட்டது.Today curd rice for 6000 people pic.twitter.com/d1TmmvYpXM

ஏப்ரல் 7-ஆம் தேதி 6000 பேருக்கு வெண் பொங்கல் சமைத்து வழங்கப்பட்டது.Today's maha Prasadam for 6000 people

ஏப்ரல் 9-ஆம் தேதி 6000 பேருக்கு பிசிபேலாபாத் சமைத்து வழங்கப்பட்டது.Today's maha Prasadam Bisibela Baath for 6000 people's.

ஏப்ரல் 10-ஆம் தேதி 6000 பேருக்கு ரவா கிச்சடி சமைத்து வழங்கப்பட்டது.Today's maha Prasadam

ஏப்ரல் 12-ஆம் தேதி 7000 பேருக்கு தக்காளி சாதம் சமைத்து வழங்கப்பட்டது.Today's maha Prasadam

ஏப்ரல் 13-ஆம் தேதி 7000 பேருக்கு சாம்பார் சாதம் சமைத்து வழங்கப்பட்டது.Today's Prasadam :- sambar rice for 7k people

ஏப்ரல் 14-ஆம் தேதி 7000 பேருக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஸ்பெஷலாக வெஜிடெபிள் புலாவ் சமைத்து வழங்கப்பட்டது.Veg pulao ready, it will take 4 hours for this (dum) to give a special flavour pic.twitter.com/ySTiI7CtYX

வெஜிட்டபிள் புலாவுடன் கேசரி இனிப்பும் சேர்த்து 14-ஆம் தேதி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.#தமிழ்புத்தாண்டு

ஏப்ரல் 15-ஆம் தேதி 7000 பேருக்கு நெய் பொங்கல் சமைத்து வழங்கப்பட்டது.Ghee Pongal Prasadam pic.twitter.com/L58BXNvBl6

ஏப்ரல் 16-ஆம் தேதி 7000 பேருக்கு கொத்தமல்லி சாதம் சமைத்து வழங்கப்பட்டது.Coriander rice prasadam is very tasty pic.twitter.com/oMhVEZGZeT

கடந்த 22 நாட்களில் கிட்டத்தட்ட 1,18,000 உணவுகளை மகேஷ் மற்றும் குழுவினர் சமைத்து வழங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளனர்.Today successfully completed 22 days of prasadam distribution

பல தடங்கல்கள் இந்த 22 நாட்களில் இவர்கள் குழு சந்தித்துள்ளது. முதலில் போலீஸார் உணவு கொடுக்கக்கூடாது என மறுத்தது, உணவு ஜீப்பில் கட்சிக்கொடியை கட்டக்கூடாது என சொல்லி ஜீப்பை பறிமுதல் செய்தது வரை எந்த இன்னல்களையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 1 மணி முதல் மகேஷ் மற்றும் குழுவினர் உணவு தயாரிப்பில் ஈடுபட்டி மாலை வரை அந்த உணவை அனைவரையும் சென்றடையும் வரை அயராது உழைத்து வருகின்றனர்.

எந்த ஒரு அரசாங்க இயந்தரமும் கூட செய்திராது ஒரு அற்புத சேவைதை இவர்கள் செய்கின்றனர் என சேலம் தெருக்களில் மக்கள் ஒருமனதாக சொல்கின்றனர். இக்குழுவினரை வாழ்த்துவது மட்டுமின்றி தங்களால் ஆன பொருள் மற்றும் பண உதவையை அனைவரும் செய்திட வேண்டும் என கதிர் செய்திகள் ஆசிரியர் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News