Kathir News
Begin typing your search above and press return to search.

தடுப்பணையை உடைத்து நீரை வெளியேற்றி மணல் திருட்டு, அதிகாரிகளும் உடந்தை - ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா.?

தடுப்பணையை உடைத்து நீரை வெளியேற்றி மணல் திருட்டு, அதிகாரிகளும் உடந்தை - ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா.?

தடுப்பணையை உடைத்து நீரை வெளியேற்றி மணல் திருட்டு, அதிகாரிகளும் உடந்தை - ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா.?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 11:38 AM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் வரும் நீரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.

பாம்பாறு அணையிலிருந்து செல்லக்கூடிய கால்வாய்களில் கொரோனா ஊரடங்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மணல் மாப்பியாக்கள் மணலை திருடி செல்கின்றனர்.

வறட்சி காலங்களில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பாம்பாற்றின் குறுக்கே சாசனூர் கிராமத்தின் அருகே தடுப்பணை கட்டப்பட்டது.

இந்த தடுப்பணைக்கு மேல்பகுதியில் மணல் பரப்பு அதிகமாக உள்ளதால் அதை திருட நினைத்த மணல் கொள்ளையர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பணையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர்.

தற்போது தண்ணீர் முழுவதும் வெளியேறியுள்ளதால் அங்குள்ள சிலர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு கவனிக்க வேண்டியதை கவனித்துவிட்டு மணல் திருடி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆற்றுப்படுகையில் சுமார் 15 அடி ஆழம் வரை ஆங்காங்கே மணல் கொள்ளயடித்து செல்கின்றனர்.

தடுப்பணையையே உடைத்து தண்ணீரை வெளியேற்றி மணல் திருடுவது தெரிந்தும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே மக்கள் கொரோனாவால் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மணல் மாப்பியா கும்பல் தடுப்பணையை உடைத்துவிட்டு மணல் திருடி செல்வதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே மணல் திருட்டில் ஈடுபடுவோர்கள் மீது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story