Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே முயற்சியில் மோடி, அமித்ஷாவை கொல்ல வேண்டும் - ஆம் ஆத்மி ஆதரவு ஃபேஸ் புக் பக்கத்தில் ஆதில் அமன் பதிவு.!

ஒரே முயற்சியில் மோடி, அமித்ஷாவை கொல்ல வேண்டும் - ஆம் ஆத்மி ஆதரவு ஃபேஸ் புக் பக்கத்தில் ஆதில் அமன் பதிவு.!

ஒரே முயற்சியில் மோடி, அமித்ஷாவை கொல்ல வேண்டும் - ஆம் ஆத்மி ஆதரவு ஃபேஸ் புக் பக்கத்தில் ஆதில் அமன் பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 2:06 AM GMT

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கும் ஃபேஸ்புக் பக்கம் துருவ் ரதி அணி ஆகும். இந்த பக்கத்தை நிர்வகிக்கும் நிர்வாகியாக உள்ளவர் ஆதில் அமன். இவர் தன்னை ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நபராகவும் கூறுகிறார்.

சமீபத்தில் இந்த ஃபேஸ் புக் பக்கத்தில் சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்டுள்ளார். அதை ட்விட்டரிலும் பகிர்ந்து வருகின்றனர். அதில் "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை ஒரே முயற்சியில் படுகொலை செய்ய வேண்டும்'' என்று ஆதில் அமன் என்ற நபர் அழைப்பு விடுத்துள்ளார்.


மேலும் "இந்த படுகொலை வெற்றிகரமான ஒரு முயற்சியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த கொலை முயற்சி வேண்டாம்" என யாருக்கோ கொலைகாரர்களுக்கு அழைப்பு விடுப்பது போல இந்த பதிவுகள் உள்ளன.

ஃபேஸ்புக் சுய விபரத்தில் தன்னை ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனையாளர் என கூறிக்கொள்ளும் ஆதில் அமன் தனது மற்றொரு பதிவில் "இந்த நாட்டில் பிராமணர்கள் இருக்கக் கூடாது" எனவும் கூறியுள்ளார். "அவர்கள் இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்கும் விஷப் பூச்சிகள்" என்றும் "ஒழித்துக் கட்டப்பட வேண்டிய அவர்கள் இந்த நாட்டுக்குள் ஊடுறியவர்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஒரு கோழைகள்" என்றும் "அவர்கள் தாங்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தப் பள்ளத்தாக்கை நோக்கி ஓடுவார்கள்" என்றும் வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ராமாயண டிவி சீரியலை ஒரு ஆபாச திரைப்படத்துடன் ஒப்பிட்டு ஒரு பதிவையும் ஆதில் அமன் அதில் பகிர்ந்துள்ளார்.

அமன் தனது பேஸ்புக் சுயவிவரத்தில், தன்னை ஆம் ஆத்மி கட்சியின் மூலோபாயவாதி என்றும், புவனேஸ்வரில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டதாரி மற்றும் ஆராய்ச்சியாளர் என்றும், பெரியார், நேரு, அம்பேத்கர், பகத் சிங், லெனின் மற்றும் பெண்ணியம் ஆகியவற்றின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர் என்றும் தன்னைக் கூறிக் கொள்கிறார்.

தலைநகர் டெல்லியை ஆளுகின்ற ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நபர் என தன்னைக் கூறிக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த சமூக ஊடக வெறுப்பு பதிவுகளைக் கண்டு நிறைய பேர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் இதுவரை ஆம் ஆத்மி கட்சியினர் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

https://swarajyamag.com/insta/self-declared-aap-strategist-calls-for-assassination-of-modi-shah-says-brahmins-are-pests-that-should-be-eradicated

Next Story