Kathir News
Begin typing your search above and press return to search.

பிரசவ வலியால் துடித்தவரை காப்பற்ற ஆட்டோ ஓட்டுனராக மாறிய புதுச்சேரி காவலர் - குவியும் பாராட்டுக்கள்!

பிரசவ வலியால் துடித்தவரை காப்பற்ற ஆட்டோ ஓட்டுனராக மாறிய புதுச்சேரி காவலர் - குவியும் பாராட்டுக்கள்!

பிரசவ வலியால் துடித்தவரை காப்பற்ற ஆட்டோ ஓட்டுனராக மாறிய புதுச்சேரி காவலர் - குவியும் பாராட்டுக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 April 2020 6:56 AM GMT

புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அப்பகுதி சீல் வைக்கப்பட்டது மேலும் எல்லைப் பகுதியான முத்தியால்பேட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக முடக்கப்பட்டது. மேலும், காவலர்கள் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள முத்தியால்பேட்டை பகுதியில் ஆயுதப் படை காவலர் கருணாகரன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த இருவர், தனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவும்படி காவலர் கருணாகரனிடம் கேட்டனர்.

இதையடுத்து, விரைந்து செயல்பட்ட காவலர் கருணாகரன், அங்கே நிறுத்திக்கப்பட்டிருந்த ஆட்டோக்களின் உரிமையாளரிடம் உதவி கோரினார். அவரோ, நான் ஆட்டோக்களை வாடகைக்கு விடுபவன், எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியாது எனக் கூறினார்.


இதையடுத்து, ஆட்டோவில் அந்தப் பெண்ணை ஏற்றிக் கொண்டு, காவலர் கருணாகரன் ஆட்டோ ஓட்டுனராக மாறி ஆட்டோவை ஓட்டிச் சென்று, சுமார் 10 கி.மீ. தொலைவுள்ள ராஜீவ் காந்தி அரசு மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. காவலரின் இந்தச் செயலை தற்போது பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.


ஆட்டோவை ஓட்டிச்சென்ற காவலர் கருணாகரனிடம் சம்பவம் குறித்து கேட்டபோது, "எனக்கு ஆட்டோ ஓட்டி பழக்கம் இருந்ததால், உடனடியாக அந்தப் பெண்ணை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். மறுநாள் முத்தியால்பேட்டை பகுதியில் பணியில் இருந்த போது, அந்தப் பெண்ணின் தாய் என்னைத் தேடி வந்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்" என்று கூறினார் என்றார் அவர்.

இதுகுறித்து மருத்துவமனையில் உள்ள அந்தப் பெண் கூறிகையில், காவலரின் உதவியால் நானும், எனது குழந்தையும் நலமாக உள்ளோம். ஊரடங்கு நேரத்தில் அவரது இந்த உதவி மறக்க முடியாதது. சகோதரனை போல எனக்கு உதவிய காவலருக்கு எனது நன்றி என்றார் அவர்.


தாய் மற்றும் சேயை காப்பற்ற ஆட்டோ ஓட்டுனராக மாறிய காவலரை, காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News