அஜித் - விஜய் ரசிகர் டிவிட்டர் வார் - நொந்து போன நடிகர்!
அஜித் - விஜய் ரசிகர் டிவிட்டர் வார் - நொந்து போன நடிகர்!

அஜீத் - விஜய் இருவரும் பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கொண்டாலும், இவர்களது ரசிகர்களின் செயல்கள் நாளுக்கு நாள் முகம் சுளிக்க வைக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் உலகமே நெருக்கடிக்குத் தள்ளப்பட்டிருக்கும் இந்நேரத்திலும் டிவிட்டரில் இருவரின் பிறந்த நாளையும் கொச்சைப்படுத்தி ஹேஷ் டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இவர்களது ரசிகர்கள். இதை பார்த்து நொந்துபோன நடிகர் சாந்தனு இரு ரசிகர்களையும் குறிப்பிட்டு டிவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அதில் "தல பற்றிய தவறான ஹேஷ்டேக்கை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்குவதும், தளபதி பற்றிய தவறான ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்குவதும் சரியல்ல. ஒருதலைபட்சமாக இல்லாமல், இரு தரப்பையும் நான் கேட்டுக் கொள்கிறேன், நாம் ஒருவருக்கொருவர் மத்தியில் தான் வாழ வேண்டும், எதிராக அல்ல. அன்பு மற்றும் அமைதியோடு வாழ்வோம்.
Very unfair of Thalapathy fans to troll negative tags on thala&Thala fans to do d same on Thalapathy!I'm requesting both sides equally,not being partial
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 18, 2020
We have to live amongst each other n not against
Pls let's live amongst love n peace&enjoy each others' work
இங்கு நான் பஞ்சாயத்து செய்ய வரவில்லை. அது என் வேலையும் இல்லை. எல்லோர் மீதும் இருக்கும் அக்கறையில் பேசுகிறேன். யாரும் யாரையும் விட்டுக் கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ஒரு கிண்டலை ஆரம்பித்தால் தல ரசிகர்கள் அதை நிராகரிக்க வேண்டும். தல ரசிகர்கள் ஆரம்பித்தால் தளபதி ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும். பதில் சொல்லத் தொடங்கும் போதுதான் (பிரச்சினை) வளர்கிறது" எனக் கூறியிருக்கிறார்.
Inga na onnum panchayat panna varale.
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) April 18, 2020
Adhu en vaelayum illa...but out of concern for all...Yaarum yaarayum vittu kuduka vaendam!
If Thalapathy fans start a troll, I req Thala fans to ignore
If Thala fans start a troll, req Thalapathy fans to ignore!
Only when u reply, it grows