பென்ஷன் குறைப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - நிர்மலா சீதாராமன்
பென்ஷன் குறைப்பு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் - நிர்மலா சீதாராமன்

கொரோனா நோய் தாக்கம் அதிகரித்ததையடுத்து மத்திய மாநில அரசுகள் இணைந்து ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்தி வருகின்றனர்
இயல்பாகவே நம்மவர்கள் ஊர் சுற்றுவதில் வல்லவர்கள் ஆனால் தற்போது எப்படி தான் வீடடங்கி இருக்கிறார்கலோ?அதுவும் வலைதள பக்கங்கள் படாதபாடு படுகிறது காரணம் பல்வேறு சர்ச்சைகள் கேள்விகள் என அரசின் அறிவிப்புகளை தங்கள் விருப்பம் போல் அறிவித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் சிலர் சுட்டுரை மூலம் கேள்வி எழுப்பினர் அதில் பெரும்பாலும் கேட்க்கபட்ட கேள்விகள் ஓய்வுபெற்றோர் ஊதியத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறபடுகிறதே என வினவி இருந்தனர்
அதற்க்கு பதில் அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் வதந்தி என பதில் அளித்தார்
மத்திய நிதி அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது அதில் ஓய்வுஊதியர்களுக்கு வழங்கும் நிதியில் குறைக்கவோ நிதியை நிறுத்தவோ எந்த திட்டமும் அவ்வாறு இல்லை எனவே ஓய்வுஊதியர்கள் வதந்தியை நம்பவேண்டாம் என கூறியுள்ளனர்
நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் 65.26 லட்சம் ஓய்வுஊதியம் பெரும் பயனாளிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.