ரமலான் மாதத்தில் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தேசிய ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்க வேண்டும் - இஸ்லாம் அமைப்பு வேண்டுகோள் - குவியும் பாராட்டுக்கள்.!
ரமலான் மாதத்தில் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தேசிய ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு கடைபிடிக்க வேண்டும் - இஸ்லாம் அமைப்பு வேண்டுகோள் - குவியும் பாராட்டுக்கள்.!

ரமலான் மாதத்தில் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தேசிய ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு கடைபிடியுங்கள்: ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்
சிறியவர்களில் இருந்து பெரியோர் வரை இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் நோன்பை முறைப்படி கடைபிடிப்பார்கள். உடலுக்கு ஆற்றல் புதுப்பித்தலையும், உள்ளத்துக்கு அமைதியையும் உறுதியையும் தரும் இந்த நோன்பை கடைபிடிக்கும் காலத்தில் மற்றவர்களும் அவர்களின் உறுதியை கண்டு பெருமிதம் அடைவார்கள். இந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் இந்த சம்பிராதாய பண்டிகை கொரோனா குறித்த விழிப்புணர்வால் துரதிஷ்டமாக வேறு வடிவில் கடைபிடிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகள் சமூக பாதுகாப்புக்காக வேண்டி மருத்துவர்கள் பரிந்துரைப்படி அரசு விதி முறைகளை கடைபிடிக்க இஸ்லாமியர்களை அறிவுறுத்தியுள்ளன. இந்த நிலையில், ஜாமியத் உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மதானி நேற்று திங்கள்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் உயிா்ப்பலிகளையும், இதர பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. சமூக இடைவெளியின் மூலம் அதன் சங்கிலித் தொடரை உடைப்பதுதான் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான ஒரே தீா்வு என்று மருத்துவ நிபுணா்கள் பரிந்துரைக்கின்றனா்.
மத வழிபாட்டுத் தலங்களிலோ, இதர இடங்களிலோ மக்கள் அதிக அளவில் கூடுவது கரோனா தொற்று பரவலை தீவிரமாக்கிவிடும். எனவே, ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் தங்களது மத நடவடிக்கைகளை ஊரடங்கு விதிகளை மீறாத வகையில் மேற்கொள்ள வேண்டும்.
5 வேளை தொழுகைக்காக மசூதிகளில் கூட வேண்டாம் என்று ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ரமலான் காலத்தில் மேற்கொள்ளப்படும் கூடுதலான 'தராவீ' தொழுகையையும் முஸ்லிம்கள் வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் ஒரே இடத்தில் 3 பேருக்கு மேல் சேரக் கூடாது. அவா்களும் தகுந்த இடைவெளியில் தொழுகையில் ஈடுபட வேண்டும். ஏழை எளியோருக்கு உதவுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மௌலானா அா்ஷத் மதானி கூறினாா்.
முன்னதாக ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் செயலா் மஹ்மூத் மதானியும் இதேபோன்று முஸ்லிம்களை வலியுறுத்தியிருந்தாா். ரமலான் காலத்தில் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்குமாறு மாநில வக்ஃபு வாரியங்களுக்கு மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.