Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை எரித்தாலும், புதைத்தாலும் எந்த ஆபத்தும் இல்லை - நடிகர் விவேக்!

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை எரித்தாலும், புதைத்தாலும் எந்த ஆபத்தும் இல்லை - நடிகர் விவேக்!

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை எரித்தாலும், புதைத்தாலும் எந்த ஆபத்தும் இல்லை - நடிகர் விவேக்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 April 2020 5:54 PM IST

இறந்த உடலில் இருந்து கொரோனா வைரஸ் பரவாது, அதனால் எந்த ஆபத்தும் இல்லை என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது.

ஒரு மருத்துவர் இறந்தால் கூட போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி இருப்பதாகவும், மிகவும் வருத்தமாக இருக்கிறது. சைமன் என்ற மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அந்த வைரஸ் அவருக்கும் பரவி உயிரிழந்ததாகவும், அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றால் மருத்துவ உண்மைகள் புரியாத சிலர், பயத்தின் காரணமாக தகராறு செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனம் மற்றும் logical india .Com என்ற இணையத்தளம் வழியாக சென்று பாருங்கள், கொரோனா வைரஸ் இறந்தவர்களின் உடலில் இருக்காது! பரவவும் செய்யாது அந்த உடலை புதைத்தாலும் அல்லது எரித்தாலும் எந்த ஆபத்தும் இல்லை, இதை நான் பல மருத்துவர்களிடம் கேட்டு உங்களிடம் சொல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மனிதர்களே அப்படி அவமதிக்க கூடாது, மருத்துவர்கள் நடமாடும் தெய்வங்கள் அவர்களை, நாம் மதிக்க வேண்டும், இறந்த மருத்துவர் சைமன் வீட்டினருக்கு இது மிகப்பெரிய மனவருத்தத்தை அளித்து இருக்கும் அவர்களுக்காக நாம் கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்! மனிதநேயத்தை காப்போம்! என கூறி உள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News