குடியரசு மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்றா ? - அதிர்ச்சி தகவல்.!
குடியரசு மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்றா ? - அதிர்ச்சி தகவல்.!

கொரோனா வைரஸால் இந்தியாவில் தற்போது வரை 18,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 592 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 125 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது
இந்நிலையில் இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒருவர் டெல்லியில் உள்ள பி எல் கபூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவர் குடியரசுத் தலைவர் மாளிகையின் ஊழியர் இல்லை எனவும் அவரது உறவினர் தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றி கொண்டிருப்பதாகவும் தற்போது அவர் சார்ந்த குடும்பத்தினர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
A #COVID19 positive patient from Central Delhi, who was neither an employee of the President's Secretariat nor a resident of the President's Estate expired on 13.04.2020 with co-morbidities at B L Kapoor Hospital, New Delhi: Rashtrapati Bhavan
— ANI (@ANI) April 21, 2020