ஒரே நாளில் இலட்சக்கணக்கான ரேபிட் கருவிகள் தயாரிக்கும் பணிகள் ஹரியானாவில் தொடங்கியது - மின்னல் வேகத்தில் செயல்படும் மத்திய அரசு
ஒரே நாளில் இலட்சக்கணக்கான ரேபிட் கருவிகள் தயாரிக்கும் பணிகள் ஹரியானாவில் தொடங்கியது - மின்னல் வேகத்தில் செயல்படும் மத்திய அரசு

ரேபிட் கருவிகள் மூலம் 20 நிமிடங்களிலேயே கொரோனா தொற்று உண்டா அல்லது இல்லையா என்கிற முடிவினை பெறமுடியும். இதனால் குறைந்த நேரத்தில் பலருக்கு இந்த சோதனையை செய்யலாம்.
இதில் பாசிட்டிவ் வந்தவர்களை உடனடியாக பிசிஆர் எனப்படும் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ய அனுப்ப வேண்டும். அதிகளவிலான சோதனைகள் நடைபெறுவதே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்பதால் அதற்கு ஏற்றது ரேபிட் கருவி சோதனைதான் என்றும், எனவே ரேபிட் கருவிகள் உடனடியாக பல மடங்கு தேவை என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கொரோனா உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளும் உபகரணங்களுக்காக அலையும் இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்க முடியாது.
எனவே நாமே ரேபிட் கருவிகளை தயாரிப்பது நல்லது என்றும் எதிர்காலத்திலும் இது தேவைப்படும் என கருதிய மோடி தலைமையிலான மத்திய அரசு அவசரமாக இந்த கருவியை தயாரிக்கும் பணிகளை முடுக்கிவிட்டது. இதற்காக தென் கொரிய நாட்டுடன் விரைவான ஒப்பந்தம் ஒன்றையும் மேற் கொண்டது.
இந்த நிலையில் ஹரியானா மனேசரில் உள்ள மூடியுள்ள மிகப்பெரிய ஆலையை மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக முதன் முதலாக இந்தியாவில் ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. தென்கொரியாவின் பயோசென்சார் நிறுவனம் இதற்கான பணியை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக வாரத்திற்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப ரேபிட் கிட்டுகளின் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் பயோசென்சார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.