கொரோனா ஊரடங்கை தளர்த்த வேண்டாம் - ஐ.நா. சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வேண்டுகோள்.!
கொரோனா ஊரடங்கை தளர்த்த வேண்டாம் - ஐ.நா. சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு வேண்டுகோள்.!
மனித சமுதாயத்தை மிரட்டி வரும் கொரோனா நச்சு கிருமி தாக்கம் ஒரளவு குறைந்து இருந்தாலும் தற்போது தெற்காசிய நாடுகளில் கொரோனா தாக்கம் வேகம் எடுத்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா நோய் வெடிப்பு தற்போது அதிகமாகி உயிர் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஆப்பிரிக்க நாடுகள் செய்வது அறியாது திகைத்து உள்ளனர்.
வல்லரசு நாடுகளை கேட்க்கவே வேண்டாம் அவர்களின் நிலை மோசம் காரணம் ஒவ்வொரு நாடும் உயிர் இழப்பு கட்டுகடங்காமல் செல்கிறது. அதற்கு ஊரடங்கை கடைபிடிக்காமல் இருந்ததும் முக்கிய காரணியாக பார்க்கபடுகிறது. தற்போது கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு மட்டுமே மருந்தாக உள்ளது அதுவும் தனி மனித விலகல் முக்கிய அம்சமாக இருக்கிறது.
சமூக விலகல் மற்றும் ஊரடங்கு கட்டுபாடுகளை உலக நாடுகள் தளர்த்த வேண்டாம் என ஐ.நா. சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்தள்ளது. உலகின் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் ஊரடங்கை விளக்குவதில் அவசரம் வேண்டாம் என ஐ.நா. சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.